அமெரிக்காவில் இசைக் கச்சேரியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற அஸ்ட்ரோவோர்ல்ட்இசைத் திருவிழாவை காண 50,000 பேர் திரண்டனர். அதில் பிரபல ராப் இசை கலைஞர் டிராவிஸ் ஸ்காட்-டின்கச்சேரியின் போது ஏராளமான ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மேடை நோக்கி சென்றனர்.
இதன்போது அதிகபடியான கூட்ட நெரிசலில் சிக்கிய பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனையடுத்து பல முறை கச்சேரியை நிறுத்திய டிராவிஸ் ஸ்காட், கூட்டத்தை கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மயக்கமடைந்த 17 பேரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அவர்களில் 11 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.