திருகோணமலை மஹதிவுல்வெவ- புபுதுபுர பிரதேசத்தில் தாய் மற்றும் அவரின் ஒன்பது மாத கைக்குழந்தைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், தொண்டை வலி, இருமல் என மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (08) சமூகமளித்த நிலையில் அவருக்கு கோவிட் அறிகுறி தென்படுவதாகச் சந்தேகித்துக் குறித்த 35 வயதுடைய பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபரின் 09 மாத கைக்குழந்தைக்கும் காய்ச்சல் காரணமாகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவரின் ஒன்பது மாத கைக்குழந்தைக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவருடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியிருந்த 14 வயது சிறுமிக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கோவிட் தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவருக்கும் தொடர்ச்சியாகக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவரின் கணவர் உட்பட உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மஹதிவுல்வெவ பொதுச் சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்