இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட அனுமதி எதுவும் வழங்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசிக்க வேண்டாம் என இந்தியாவிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய அத்து மீறல்களில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்து நாட்டுக்குள் அழைத்து வருவதனை தவிர்த்து கடற்பரப்பில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் டெல்டா பிறழ்வு காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் ஆழ் கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுப்பதற்கு சில பகுதிகளில் பழைய பஸ்கள் மற்றும் ரயில் பெட்டிகள் கடலில் போடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.