உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி நாட்டில் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை ஒரு அவுன்ஸ் விலை 30 டொலர் வரையில் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் அதன் விலையானது 23.30 டொலர் அதிகரித்துள்ளது.
அதன் காரணமாக வார இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1816.80 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் உயர்ந்த போக்கைக் காட்டும் நிலையிலும் தங்கத்தின் விலை உயர்வு வருவதாக கூறப்படுகின்றது.