இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தபு.
6 மொழிகளுக்கு மேல் நிறைய ஹிட் படங்கள் நடித்துள்ளார், 90களில் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை எப்படி கொண்டாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
முன்னணி நாயகியாக இருந்துவந்த அவர் வாய்ப்புகள் குறைய துணை நடிகை வேடங்களில் நடித்து வந்தார், 51 வயதாகிறது இப்போதும் படங்கள் நடித்து வருகிறார்.
ஆனால் தபு இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, அதன் காரணத்தை ஒரு பேட்டியில் இவர் கூற அந்த தகவல் இப்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், நான் திருமணம் செய்யாததற்கு காரணம் அஜய் தேவ்கன் தான். என்னுடைய ஒவ்வொரு விஷயத்தையும் அவர் கவனித்து வந்தார், எங்கு சென்றாலும் பின் தொடர்வார். நான் எந்த பையனுடன் பேசினாலும் அவருக்கு பிடிக்காது சண்டை போடுவார்.
எனவே அப்படியே திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.