மன்னார் வளைகுடாவில் அரிய வகை பறக்கும் மீன் பிடிபட்டதை உள்ளூர் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Exocoetus volitans என்றழைக்கப்படும் இந்த மீன் கீழக்கரையை சேர்ந்த முரளி என்பவரின் வலையில் சிக்கியது.
கடலில் தொடர்ந்து 1300 மீட்டர் தொலைவுக்கு பறக்கும் திறன் வந்த இந்த மீனின் வால், நிமிடத்திற்கு 70 முறை வேகமாக அசைக்கக்கூடியது.
இதனாலேயே தன்னுடைய உடலை சமநிலைப்படுத்தி தனது இறக்கையை விரித்து டால்பின் போல தண்ணீரில் இருந்து மேலே எழும்பிப் பறக்கிறது.
நீரினுள் இருக்கும்போதே பறப்பதற்கு முன் வேகமெடுத்து, நீரின் மேற்பரப்பை நோக்கி இந்த மீன் நீந்தி வரும்.
நீர்பரப்பை அடைந்ததும் தன் துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித்தாவும். சுமார் 20 அடி உயரம் வரை இந்த மீன் பறக்கும் என்று கடல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாகவே அட்லாண்டிக், பசிபிக், இந்திய பெருங்கடலில் இந்த மீன்கள் அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



















