அடுத்த வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 28 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நவம்பர் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
கொழும்பு 04, 05, 06, 07 மற் றும் 08, கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகள், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை போன்ற பகுதிகளுக்கு நீர் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பிரதான மின் கடத்தல் பாதையில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக அம்பத்தலேயில் இருந்து கோட்டே நீர் தாங்கிக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.