நெதர்லாந்து இன்று (சனிக்கிழமை) முதல் முடக்க நிலைக்குள் இருக்கும் எனவும் கட்டுப்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மார்க் ரூட் வெளியிட்டார்.
கோவிட்-19 தொற்றுகளின் விரைவான எழுச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், உணவகங்கள் மற்றும் கடைகளை முன்கூட்டியே மூடவும் மற்றும் பார்வையாளர்களை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளிலிருந்து தடைசெய்யவும் நெதர்லாந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சமூக தொலைதூர நடவடிக்கைகள் மீண்டும் விதிக்கப்படும். நான்கு பார்வையாளர்களுக்கு மேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று அரசாங்கம் பரிந்துரைத்தது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வருகிறன.
அருந்தகங்கள் மற்றும் இரவு விடுதிகள் இன்று (சனிக்கிழமை) முதல் இரவு 8 மணிக்கு மூடப்படும். அதேசமயம் பாடசாலைகள் மற்றும் திரையரங்குகளுக்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கோவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 21ஆவது நாடாக விளங்கும் நெதர்லாந்தில், 2,269,235பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18,695பேர் உயிரிழந்துள்ளனர்.