சந்தையில் தற்போது தேங்காய்க்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக தேங்காயின் விலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்தில் தேங்காய் ஒன்று 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
தற்போது, கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.
தொடர் மழை காரணமாக தேங்காய் மட்டையை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேங்காய் தட்டுப்பாடு காரணமாக அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.