இடுக்கியில் உள்ள சிறுதோணி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று இரவு முதல் பரவலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொட்டிவரும் மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன



















