நாட்டில் மழையுடனான காலநிலை இன்றைய தினமும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்திலும் சில பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



















