ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கியதிலும் கூட தமிழ் தரப்பினருக்கு குறிப்பிட்டளவான வேலைவாய்ப்பே வழங்கப்பட்டுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தெரிவித்துள்ளார்.
எனவே, முடிந்தால் நாட்டில் வாழும் அனைத்து தமிழ் தரப்பினருக்கும் வேலைவாய்ப்பை வழங்குங்கள் என அரசாங்கத்திற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


















