“இந்த அரசாங்கத்தை அடுத்த இரண்டரை வருடங்களுக்கு வீழ்த்த முடியாது” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வீதிகளில் எத்தனை ஆர்ப்பாட்டங்களைச் செய்தாலும் , தீர்மானங்களை எடுப்பது நாடாளுமன்றம் என்றால் நாடாளுமன்றில் அது தொடர்பில் பேசுங்கள். இந்த அரசாங்கத்தை இரண்டரை வருடங்களுக்கு வீழ்த்த முடியாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு அடுத்த வாரத்தோடு 2 வருடங்கள் நிறைவடைகின்றது. இன்னும் ஒன்றரை வருடங்கள் வரை அவர்களே கொண்டுவந்த அரசியலமைப்பின் படி அரசாங்கத்தை எப்படியும் கலைக்க முடியாது.