கோவிட் நோயாளர்களைப் போலவே, நாட்டில் டெங்கு நோயாளர்களும் அதிகரித்து வருவதாக சிறுவர்களுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH) ஆலோசகர் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியா் தீபால் பெரேரா தெரிவித்துளளார்
கோவிட் நோயாளிகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது, ஆனால் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடா்பில் இன்னும் உாிய கவனம் செலுத்தப்படுவதில்லை.
அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு சிகிச்சைப் பிாிவுகளிலும் நான்கு அல்லது ஐந்து டெங்கு நோயாளிகள் தங்கிச்சிகிச்சைப் பெறுகின்றனர்.
நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
சீரற்ற காலநிலை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகவே டெங்கு பரவும் இடங்கள் அதிகரித்துள்ளன.
சிமெந்து கையிருப்பு இல்லாததால், பெரும்பாலான கட்டுமானத் தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. எனவே, அந்த இடங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.
மேலும் அந்த தளங்களைப் பராமரிக்கவும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும் எவரும் இல்லை. கடும் மழை காரணமாக, அந்த கைவிடப்பட்ட கட்டுமான தளங்கள் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய உாிய இடங்களாக மாறியுள்ளதாக தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துவது போன்று டெங்கு வைரஸ் பரவுவதில் அதிக கவனம் செலுத்துமாறு குழந்தை நல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் மருத்துவரைச் சந்திக்கும் வரை அவர்களின் எடைக்கு ஏற்ப பெரசிட்டமோல் மாத்திரைகளை மட்டும் கொடுப்பது நல்லது என்றும் வைத்தியா் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.