கிளிநொச்சியில் நேற்று முன் தினம் (26) மாலை ஊடகவியலாளர் ஒருவரை ஏ9 வீதியில் வைத்து தாக்கி கருப்பு நிற வாகனம் ஒன்றில் கடத்த முயற்சி செய்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கிளி நொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கைதானவர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கிளிநொச்சி ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஊடக அமைப்புக்கள் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.