2021ம் ஆண்டின் கடைசி மற்றும் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணமானது நவம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு முன்பு 15ஆம் நூற்றாண்டில் தென்பட்ட சந்திர கிரகணத்தில் இருந்து, அதாவது580 ஆண்டுகளில் மிக நீண்டதாக இருக்கும்.
கடைசியாக இவ்வளவு நீளமான கிரகணம் 1440 பிப்ரவரி 18ஆம் தேதி நிகழ்ந்தது, தற்போதைய கிரகணத்தின் காலம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 24 விநாடிகள் ஆகும்.
சந்திர கிரகணம் என்பது என்ன?
சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
புராண கதைகளின் படி,
சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார்.
ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.
இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.
கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை
கிரகணத்தின் போது செய்யும் காரியங்கள் பல மடங்கும் உயரும் என்பதால், நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உறவு வைத்துக் கொள்ளுதல் கூடாது.
கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது வெளியே வந்தால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் வெளியே வரக்கூடாது என கூறப்படுகிறது. கிரகணத்தின் போது பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
கிரகணம் முடிந்த பின்னர் கடலிலோ அல்லது கல் உப்பு சிறிது போட்ட அந்த தண்ணீரில் குளித்தல் நல்லது. அப்படி செய்தால் கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் உடலில் இருந்து அகலும்.
இதேபோன்று நன்றாக உறங்கி, காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி வருவது நல்லது.