தமிழகத்தில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,262 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய சமயத்தில் 813 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
அதிகபட்சமாக தேனியில் 358 பேரும், மதுரையில், 239 பேரும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சென்னையில் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு தொற்றாளர்கள் பதிவான நிலையிலும் எந்த ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.