உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி , நேற்று ஒரு அவுன்ஸ் தங்கம் 1,863 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.