திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டில் 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றதாகவும், 2020ஆம் ஆண்டில் 143,061 ஆகக் குறைந்துள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அதிகளவாக 14,617 திருமண பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய,திருமணம் மற்றும் அத்தியாவசியமான விழாக்கள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றிற்கு மிக குறைந்தளவிலான மக்களை ஒன்று திரட்டுமாறு சுகாதார அமைச்சு நேற்றைய தினம் முக்கிய அறிவிப்பொன்றினை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த 16ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன.