மக்கள் தற்போது வறுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது ஏன்? நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்குடனா இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adakkalanathan) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 02ஆம் வாசிப்பு மீதான 05 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் பொருட்களின் விலை மேலும் உயருமென எதிர்வு கூறப்படுகின்றது. இதனை தடுப்பதற்கான வல்லமை இந்த அரசாங்கத்திடம் இல்லை.
இந்நிலையில் இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.