பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ இன்று காலை வெளியாகியிருந்தது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி பருவ டாஸ்க் செய்கிறார்கள் என்பது நமக்கு தெரியும்.
காலை வந்த புரொமோவில் சிபி, அக்ஷாராவை சில வேலைகள் செய்ய கூறுகிறார், ஆனால் அவரோ எந்த வேலை செய்யட்டும், இதை செய் அதை செய் என உடனே உடனே கூறினால் என்ன செய்ய முடியும்.
என்னால் எதுவும் செய்ய முடியாது என கோபமாக வீட்டில் இருந்த பொருளை தட்டிவிட்டு ஒரு அறைக்குள் சென்றுவிட்டார்.
இப்போது வந்துள்ள இரண்டாவது புரொமோவில் சிபி மற்றும் ராஜுவை கோபமாக கத்தி திட்டுகிறார். இருவரையும் தயதுசெய்து சென்றுவிடுங்கள் என கோபமாக கூறுகிறார்.
இறுதியில் பிக்பாஸ் அக்ஷாராவை Confession அறைக்கு அழைக்கிறார்.