புதிய ஜேர்மன் அரசாங்கம் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியில் மூன்று முன்னணி கட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை புதைக்கிழமை வெளியிட்டதையடுத்து, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளது.
ஏஞ்சலா மேர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவடைந்து, SDP தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் சான்செலராக பதவியேற்கவுள்ளார்.
மத்திய-இடது SPD, தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் பசுமைவாத கட்சிகள் சேர்ந்த இந்த கூட்டணியானது புதன்கிழமையன்று, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் நிகழ்ச்சி நிரலை 180 வெளியிட்டது.
அதில், ஜேர்மனியில் நிலக்கரி சக்தியைக் குறைத்தல் மற்றும் கோவிட் தொற்று நோயைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பிற நடவடிக்கைகளுடன், உரிமம் பெற்ற கடைகளில் விற்கப்படும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான உறுதிமொழியும் அதில் அடங்கியுள்ளது.
2017-ஆம் ஆண்டில் மருத்துவ மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கியதில் இருந்து, ஜேர்மனியின் சந்தை ஐரோப்பாவில் மிகப்பெரியதாக மாறியுள்ளது.
Photo: Omer Messinger/EPA, via Shutterstock
கடந்த ஆண்டு 154 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள உயர்-THC தயாரிப்புகளை நோயாளிகளுக்கு விற்பனை செய்துள்ளது.
தற்போதைய ஜேர்மன் சட்டத்தின்படி கஞ்சாவை உட்கொள்வது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அதை வாங்குவதுதான் தண்டனைக்குரிய குற்றம்.
இந்நிலையில், ஜேர்மனியில் பொழுதுபோக்கிற்காக கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டால், 83 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடான ஜேர்மனி – உலகின் மிகப்பெரிய கஞ்சா சந்தையாக மாறும்.