பிரேசிலில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண், 90 நாட்களில் விவாகரத்து செய்து கொண்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பிரேசிலை சேர்ந்த மொடல் Cris Galera , 31 வயதான இவர் 90 நாட்களுக்கு முன் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
அப்போது, நான் மிகவும் வலிமையான பெண், என்னை பற்றி நானே உணர்ந்து கொண்ட போது அதை கொண்டாட முடிவு செய்தேன், தனியாக இருப்பதில் பயம் இருந்ததால் என்னை நானே திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கான நபர் கிடைத்துவிட்டதால், விவாகரத்து செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரையே திருமணம் செய்து கொண்ட போது ஏராளமான நெகடிவ் கமெண்டுகள் வந்ததாவும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.