பொதுவாக மனிதனாக பிறந்தால், ஏழு பிறவிகள் எடுத்திருப்பார்கள் என்று சாஸ்திரம் கூறப்படுகிறது. ஆனால், இந்த ஏழு பிறவியிலும் செய்த பாவங்களை போக்க ஒரு சிறந்த பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
நாம் தெரிந்து அல்லது தெரியாமல் செய்த பாவங்கள் எப்பொழுதுமே நம்மை சுற்றிக்கொண்டு தான் இருக்குமாம். அந்த சமயத்தில் நாம் செய்யும் சிறிய தானம் கூடம் நம்மளை காக்க பல மடங்கு பலனை அளிக்ககூடும்,.
அந்த வகையில், தினமும் காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது நாம் பச்சரிசி மாவில் கோலம் போட்டால் நம்முடைய பாவங்கள் நீங்குவதாக ஐதீகம் உண்டு.
ஆனால், கோலமாவை கொண்டு கோலம் போடக்கூடாது, பச்சரிசி மாவைக் கொண்டு கோலம் போடும் பொழுது அது தெய்வீக தன்மை ஆக மாறுகிறது. இதனால், கோலமும் பிரகாசமாக ஜொலிக்கும், அதை சாப்பிட வரும் எறும்புகள் மூலம் உங்களுக்கு புண்ணியமும் பெருகும். இப்படி எறும்புகளுக்கு உணவிடுவதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீர்வதாக தீர்க்கமாக நம்பப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை நாளில் நீங்கள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக சூரிய உதயத்தின் பொழுது சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்.
பின் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகரை சுற்றி நீங்கள் கையில் வைத்திருக்கும் இந்த பச்சரிசி மாவை போட வேண்டும். இதை உண்ண வரும் எறும்புகள் மூலம் நம்முடைய ஏழு ஏழு பிறவி பாவமும் நீங்குவதாக நம்பப்படுகிறது.
ஒரு எறும்பு, நீங்கள் வைத்த பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு போய் சாப்பிட்டாலும் நீங்கள் செய்த பல பாவங்களில் இருந்து விடுபடுவீர்கள். எறும்புகள் எப்பொழுதும் மழைக்காலங்களில் தன்னுடைய உணவை பொந்துகளில் சேமித்து வைக்கும்.
ஆனால் எறும்புகளின் எச்சில் பட்ட எந்த ஒரு உணவும் இரண்டே கால் வருடம் வரை கெட்டு போவது இல்லை. இந்த இரண்டு வருடம் நாம் தானமாக கொடுத்த உணவானது எறும்புக்கு பயன்படுகிறது என்பதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டே இருப்பார்களாம்.
இதனால் தான் எறும்புகளுக்கு உணவிடுவதன் மூலம் நம் பாவங்கள் நீங்குவதாக ஐதீகம் சொல்லப்பட்டுள்ளது. எனவே சனி தோஷம் உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பயன்பெறுங்கள்.