ராஜஸ்தானை சேர்ந்தவர் அர்விந்த் ஜாங்கிட். இவர் வளர்க்கும் எருமை மாட்டின் பெயர் பீம், இந்த எருமை மாடு உயர்ரகத்தை சேர்ந்தது.
1500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின், பராமரிப்பு செலவுக்கு மட்டுமே மாதம் ரூ.2 லட்சம் செலவாகிறதாம்.
இதன் விந்து 0.25 மிலி ரூ.500-க்கு விற்கப்படும் நிலையில், ஆண்டுக்கு 2500 மிலி விந்துவை விற்று ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார்.
மேலும், இதன் விந்துவின் மூலம் பிறக்கும் எருமைகள் 40 முதல் 50 கிலோ எடை இருக்கும். இவர் வளர்ந்தபின் நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் பால் கறக்கும் திறன் கொண்டவையாக உள்ளது.
அதனால் தான் பீம் எருமைக்கு பெரும் கிராக்கி உள்ளது. பீம் எருமையை ரூ.24 கோடி விலைக்கு கேட்டும், அதைக் விற்க அர்விந்த் மறுத்துவிட்டார்.