நாம் எவ்வளவு தான் சுத்தமாக சமையலறையை வைத்திருந்தாலும் ஈக்கள் வருவதை தடுக்க முடியாது.
சமையல் அறையில் ஈக்களின் தொந்தரவு சில சமயம் அதிகமாக இருக்கும்.
இப்படிப்பட்ட பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண இஞ்சி உதவி புரியும்.
இஞ்சியின் நன்மைகள் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு மனித ஆரோக்கியத்துடன் தொடர்புடைய மூலிகை பொருள். இதனை வைத்து எப்படி ஈக்களை நிரந்தரமாக விரட்டும் ஸ்ப்ரே தயாரிப்பது என்று பார்க்கலாம்.
இஞ்சி ஸ்ப்ரே செய்முறை
4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் இஞ்சி பொடியை சேர்க்கவும்.
இரண்டும் நன்றாக கலக்கும் படி கலவையை நன்றாக கிளறிவிடவும். பிறகு இதை வடிகட்டி ஈக்கள் குவிந்திருக்கும் இடத்தில் விரட்டி அடிக்கவும்.
இஞ்சியின் வாசனை ஈக்களை வீட்டை விட்டே ஓட வைக்கும் அளவுக்கு ஈக்கு எதிரானது.
இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்த இந்த கலவை செடிகளில் இருக்கும் பூச்சிகளை விரட்டும் சத்தான மருந்து. இஞ்சியின் வலுவான விரட்டும் வாசனை விரட்டுவதற்கு மட்டும் இல்லை ஈக்களை உள்நுழைவதையும் தடுக்கிறது.