அமெரிக்க அரசாங்கம் தனது தடை செய்யப்பட்ட வர்த்தகப் பட்டியலில் மேலும் ஒரு தொகுதி சீன நிறுவனங்களை இணைந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை கவலைகளை மேற்கோள் காட்டி அமெரிக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தாய்வான் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் வொஷிங்டனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கமைய,8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்கா வர்த்தக தடைப்பட்டியலில் சேர்த்துள்ளது.
அத்துடன் பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூரை சேர்ந்த மொத்தம் 27 நிறுவனங்கள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.