பண்டிகை காலப்பகுதியில் கோவிட் வைரஸ் தொற்று பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலப்பகுதியில் உள்ள சுகாதார வழிக்காட்டல்கள் இதற்கு முன்னர் காணப்பட்டதனை விடவும் தளர்த்தப்பட்டுள்ளது.
பொதுவாக பண்டிகை காலங்களில், சிறு குழந்தை முதல் அனைவருக்கும் சமூக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பண்டிகை காலத்துடன் தொடர்புடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சுகாதார வழிக்காட்டல்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டாலும் சிலர் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாமல் இருப்பது ஆபத்தான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.