மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தளவாய் பகுதியிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செங்கலடி, தளவாய் பகுதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் நேற்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த தனியார் காணியினுள் கூலித் தொழிலில் ஈடுபடும் செங்கலடி கித்துள் பகுதியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீதர் (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.