அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினூடாக மோல்னுபிரவீர் கெப்சூல்களை (Molnupiravir Capsule) நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற கோவிட் – 19 தடுப்புச் செயலணி கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளுக்கு கிளினிக் செல்லும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்த சிகிச்சை நிலையத்தில் வைத்தே இந்த பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.