இதுவரையில் தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் பரவிய ஒமிக்ரோன் என்ற கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவும் அபாயம் எற்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு PCR பரிசோதனை இல்லாமை காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் திரிபை நாம் கவனித்துக் கொள்ளாவிட்டால், வசந்த காலம் முடிந்துவிடும். இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒரு நாடாக நாம் கோவிட் நோயை ஓரளவு கட்டுப்படுத்தி வருகிறோம்.
ஒமிக்ரோன் மாறுபாடு மீண்டும் வரும் மாறுபாடு ஆகும். இது தற்போதுள்ள அனைத்து தடுப்பூசிகளுக்கும் எதிராக செயற்படும். ஒமிக்ரோன் நாட்டிற்குள் நுழைகிறது என்பது அனைவரின் வசந்த காலத்தையும் முடித்துவிட்டது என அர்த்தமாகும்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் PCR பரிசோதனை செய்யாமையினால் ஆபத்தான நிலைமை ஏற்படும். உடனடியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு PCR பரிசோதனை ஆரம்பிக்க வேண்டும். இல்லை என்றால் இம்முறையும் நாட்டிற்கு ஆபத்தான நிலைமை ஏற்படும்.