வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தென் ஆபிரிக்கா பிராந்தியம் உட்பட சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் என்ற கோவிட் வைரஸ் திரிபு இலங்கைக்குள் பரவும் ஆபத்து அதிகம் இருக்கின்றது.
இந்த ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்றால், வசந்தகாலம் முடிந்து போகும்.
இந்த புதிய வைரஸ் திரிபு மீண்டும், மீண்டும் தொற்றக் கூடியது என்பது மாத்திரமல்ல, சகல தடுப்பூசிகளையும் மீறி உடலில் தொற்றக் கூடிய வைரஸ் திரிபு.
இந்த வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவினால், அனைவரது வசந்தகாலமும் முடிந்து விடும்.
நாட்டுக்குள் வருவோருக்கு கோவிட் பரிசோதனை செய்ய சுகாதார அமைச்சு வழிக்காட்டல்களை வெளியிட்டுள்ளது. அதனை உடனடியாக நிறுத்தி விட்டு, பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றதால், இலங்கை இம்முறை ஓய்ந்து விடும் எனவும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.