வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளிடமும் ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் பரிசோதனை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் விமான நிலையத்திலேயே பரிசோதனை நடத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் உரிய முறையில் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
விமான நிலையத்தில் இந்த புதிய திரிபு தொற்றாளிகளை அடையாளம் காண வேண்டுமாயின் முழு மரபணு வரிமுறை பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
எனினும் இவ்வாறு அனைத்து பயணிகளிடமும் பரிசோதனை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.