உலகம் முழுவதுமே டிசம்பர் மாதம் 25-ம் திகதி கிறிஸ்துமஸ் பாண்டிகையை கொண்டாடப்பட்ட உள்ளது. ஆனால், தற்போது இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா வைரஸின் 4வது அலை தீவிரமடைந்து வருகின்றது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பாதிப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
மேலும் ஜெர்மனியின் தலைநகரன பெர்லினில் கோலாகலமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறு குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பரிசளித்து மகிழ்ச்சி அளித்துள்ளனர்.