தமிழ் மொழியை புறக்கணிக்கவேண்டாம் என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இலங்கையின் கல்வித்துறையில் தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது.
இதனை மாற்றி தமிழ் மொழி கல்விக்காக ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியை நியமித்து தமிழ் கல்வியில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுத்தினார்