உலகின் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ஆபத்து நிறைந்த சில நாடுகளின் பட்டியலின் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ், இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் நாடு பிரேஸில், ரஷ்யா, தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, எஸ்வடினி, மொரீசியஸ், மலாவி, லெசோதோ, மொஸாம்பிக், நமீபியா, ஜாம்பியா, ஸிம்பாவே, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சிவப்பு பட்டியலில் குறிப்பிட்டு, இந்த நாடுகளுக்கு பயணிப்பதை முடிந்தவதை தவிர்க்கும் படி பயணிகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் இந்த நாடுகளுக்கு பயணத்தடை எதையும் விதிக்கவில்லை, குறித்த நாடுகளில் இருந்து பிரான்சுக்குள் வருபவர்கள் கட்டாயமாக 24 மணிநேரங்களுக்கு உட்பட்ட எதிமறை முடிவுகளுடன் PCR சோதனை செய்ததை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியாகியுள்ள வரைபடத்தில், பச்சை, மஞ்சள் அல்லது செம்மஞ்சள் ஆகிய நிறத்தில் வண்ணமிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 48 மணிநேரங்களுக்கு உட்பட்ட எதிர்மறை PCR சோதனை செய்ததையும் கொண்டு வர வேண்டும், ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.