இலங்கை பிரஜை பாக்கிஸ்தானில் நாட்டில் கொல்லப்பட்டமை குறித்த எனது நாட்டின் சீற்றத்தையும் அவமானத்தையும் தெரிவிப்பதற்காக என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்த போது குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், 100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிற்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக இம்ரான்கான் மேலும் கூறியுள்ளார்.
Spoke to Sri Lankan President Gotabaya Rajapaksa today in UAE to convey our nation’s anger & shame to people of Sri Lanka at vigilante killing of Priyantha Diyawadana in Sialkot. I informed him 100+ ppl arrested & assured him they would be prosecuted with full severity of the law
— Imran Khan (@ImranKhanPTI) December 4, 2021