பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தகவல் தொடர்பாடல் அமைச்சரும், அரசாங்க ஊடகப் பேச்சாளருமான பவாத் செளத்திரி இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் ஊழியர், ஏனைய ஊழியர்களினால் சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபர் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவர் என சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி உமர் சயீத் மாலிக் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இரு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.