நாட்டு மக்கள் உரிய முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து நபர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என சுகாதார பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேபோன்று அடையாளம் காணப்படாத நபர்கள் பலர் சமூகத்தில் இருக்கலாம். இந்த நோய்த் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசியே சிறந்த ஆயுதம்.
இதற்கு மேலதிகமாக சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.