இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான பெண் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் இலங்கையில் இருந்து சென்ற முறை மற்றும் மீண்டும் நாட்டுக்கு வருகைத்தந்த முறை தொடர்பில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் எவ்வித கொரோனா தடுப்பூசிகளும் பெறாமையே அதற்கு முக்கிய காரணமாகும். இந்த விடயத்தில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பொறுப்பற்றவர்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் குறித்த பெண் மற்றும் அவரது கணவர் எவ்வாறு வெளிநாடு சென்றார். அவர் வெளிநாட்டில் இருந்து எவ்வாறு வீட்டிற்கு சென்றார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதனையின்றி குறித்த பெண் எவ்வாறு வெளிநாட்டிற்கு சென்றார்.
அதிகாரிகள் எவ்வாறு இந்தளவிற்கு பொறுப்பற்ற முறையில் செயற்பட முடியும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைக்கமைய அதிகாலை 2 மணிக்கு பின்னர் யார் வேண்டுமானாலும் நாட்டிற்குள் நுழைய முடியும் என அவர் மேலும் தெரிவித்து்ளார்.