அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சக மாணவர்கள் நால்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தில் நான்கு உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக் கொன்றது தொடர்பாக 15 வயது ஈதன் க்ரம்ப்ளே கைதாகியுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மகனின் கொடுஞ்செயலுக்கு துணைப் போனதாக கூறி கைதாகியுள்ள ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தம்பதி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பரிசாக துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்த ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தம்பதி, மகனிடம் அது தொடர்பான எச்சரிக்கைகளை குறிப்பிடாமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இணையத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வாங்க முயன்றது ஆசிரியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட, தவறு செய்தால் சிக்காமல் இருப்பது தொடர்பில் கற்றுக்கொள்ள வேண்டும் என அந்த தம்பதி மகனுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
இந்த நிலையிலேயே ஈதன் க்ரம்ப்ளே தமது கிறிஸ்துமஸ் பரிசான துப்பாக்கியால் சக மாணவர்கள் நால்வரை சுட்டுக்கொன்றுள்ளான். ஈதன் க்ரம்ப்ளே மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், பள்ளிக்குள் ஆயுதம் எடுத்து வந்ததுடன் கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி பிணை மறுக்கப்பட்டுள்ளார்.
மிச்சிகன் மாகாணத்தில் அமுலில் இருக்கும் விதிகளின்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் துப்பாக்கி வைத்திருப்பதும் பரிசளிக்கப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈதன் தமக்கு பரிசாக கிடைத்த துப்பாக்கி தொடர்பில் சமூக ஊடகத்தில் பகிரவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.