இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் கிழக்குப் பகுதியான செமெருவில் எரிமலை வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பால் பெருமளவு புகைமூட்டத்துடன் வந்ததால், அருகில் உள்ள கிராமங்கள் வரை புகைமண்டலமாக காட்சியளித்திருக்கிறது.
மேலும், இந்த புகை மண்டல காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் அலையறித்து ஓடும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகின.
இந்த புகை 15,000 மீட்டருக்கு மேல் நோக்கி பரவக்கூடும் என்பதால், விமான சேவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
கடல் மட்டத்தில் இருந்து 3,676 மீட்டர் உயரத்திலுள்ள செமெரு எரிமலை கடந்த ஜனவரி மாதத்திலும் வெடித்துச் சிதறியது.