பொதுவாக ஒரு மனிதனுக்கு இருமல், தும்மல், கொட்டாவி, ஏப்பம் என போன்றவைகள் வருவது இயற்கை தான். ஆனால் அதைவைத்தே நபர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகில் பல விதமான வினோத சாதனைகள் நடைபெற்றாலும், இச்சாதனையே மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவுஸ்திரியாவை சேர்ந்த நெவில் என்ற இந்த நபர் தான் இச்சாதனைக்கு சொந்தக்காரர்.
கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் நெவில் 112.4 டெசிபெள் அளவிற்கு சத்தமாக ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைக்கும் இந்த நபரின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 12 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டன் நபர் ஒருவர் செய்திருந்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் உலக சாதனை செய்ய வேண்டும் என்று நீ-ண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். அதற்காக மிகவும் சத்தமாக ஏப்பம் விடுவதை தேர்வு செய்தேன்.
ஏனெ-ன்றால் நான் என்னுடைய சிறுவயது முதல் மிகவும் சத்தமாக ஏப்பம் விடுவேன். அதை கடந்த 5 ஆண்டுகளாக சாதனை செய்ய பயன்படுத்த தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன்.
இதனால் தற்போது கின்னஸ் சாதனை படைத்துவிட்டேன்” என தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் வியந்துபோய் இப்படி ஒரு சாதனையா? என தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.