கொரோனா வைரஸ் உலகமெங்கும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நேரத்தில், ஐந்தாவது அலைவரை சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் ஒரு பக்கம் ஓமிக்ரோன் என்ற புதிய வகை வைரஸும் பெரும் பீதியை கிளப்பி கொண்டு இருக்கிறது.
இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு பின் தீவு ஒன்றில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.
நியூசிலாந்தின், தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான குக்-கில், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படவுள்ள நிலையில், முதல் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மேலும், அந்த குக் தீவுகளின் மக்கள் தொகை 17 ஆயிரம் பேர். இங்கு உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதம் கொண்ட நாடாக இது திகழ்கிறது.
இங்கு அனுமதி வழங்கப்பட்டவர்களில், 96 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
முதல் கொரோனா பாதிக்கப்பட்டவர் யார் என்றால் 10 வயது சிறுவன் தான் என அந்நாட்டும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார். அந்த சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளான்.