வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது,
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடி மின்னல் தாக்குதல்கள் குறித்து மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.



















