பொதுவாக ஏசியை அதிகமாக கோடையின் வெப்பத்தை தவிர்க்கவே பயன்படுத்துவார்கள். ஏசியால் பல கெடுதல் இருந்தாலும், ஒரு சிலரோ குளிர்காலத்திலும் ஏசியை பயன்படுத்துகிறார்கள்.
அப்படி குளிர்காலத்தில் ஏசியை பயன்படுத்தி வந்தால் எந்த மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
குளிர்காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகரித்தால், அதனால் ஏசி முதலில் பழுதடைய ஆரம்பிக்கும். இதற்கு முக்கிய காரணமே உங்கள் ஏர் கண்டிஷனர் சாதனத்தில் உள்ள கண்டென்சிங் யூனிட் குளிர் காலநிலையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்பது தான்.
ஏனென்றால், ஏசியில் உள்ள கண்டென்சிங் யூனிட்டில் உள்ள கம்ப்ரசரை உயவூட்டுவதற்காக சில இரசாயன எண்ணெய் ஏசி நிறுவனங்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இந்த எண்ணெய் ஒரு கனமான தரத்தைக் கொண்டது என்பதனால், குளிர் காலத்தில் இதைப் பயன்படுத்துவது பாதிப்பை உண்டாக்கும். வீட்டின் வெளியில் ஏற்கனவே குளிர்ச்சியாக இருக்கும்போது பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி இன்னும் அதிகமாகக் குளிர்விக்க விரும்புவதில்லை.
குளிரில் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், குளிரூட்டும் காயில்களில் ஒடுக்கம் இருந்தால், அது ஏசி யூனிட்டை ஒட்டுமொத்தமாக உறையச் செய்து மொத்தமாகச் சேதப்படுத்தக் கூடும்.
சரி இதையெல்லாம் எப்படி சமாளிக்கலாம், உங்கள் பகுதியில் உள்ள வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டை விடக் குறைவாக இருந்தால், பயனர்கள் தங்கள் ஏசி யூனிட்களை நீண்ட காலத்திற்கு இயக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
முதலில் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 60 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும் வரை காத்திருப்பது சிறப்பானது. காரணம், இது ஏசி கம்பிரஸரில் உள்ள எண்ணெய்யைச் சூடாக்க அனுமதிக்கும் மற்றும் மின்தேக்கியில் உள்ள உறைந்த கட்டிகள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய உதவும்.
ஆனால், இப்போது வரும் சில ஏசி மாடல்களில் ஹீட்டர் வசதியும் இருக்கிறது. இது குளிர் காலத்தில் சூடான காற்றை வழங்க அனுமதிக்கிறது. இது போன்ற இரட்டை காலநிலை மாடல்கள் கொண்ட ஏசியை வாங்குவது பயன்பாட்டிற்குச் சிறப்பானது.