நாடு வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஒரே வழி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறும் மாற்று வழிகள் எதுவும் இல்லை எனவும், உள்நாட்டு ரீதியான தீர்வுத்திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்கான காலம் கடந்து விட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு பிள்ளை கடுமையாக நோய் வாய்ப்பட்டால் அதனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.மாறாக வீட்டில் கசாயங்களை வைத்து கொடுத்து வீட்டில் பராமரிப்பது பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு வேறும் எந்தவொரு மாற்று வழியும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு இடையில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 30 வீத வீழச்சியை பதிவு செய்துள்ளது எனவும், எதிர்வரும் ஜனவரி மாதம் இது மறைப் பெறுமதியை எட்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையை இதுவரையில் சந்தித்தது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.