பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று வெடித்த சண்டையில் பிரியங்காவின் மற்றொரு முகம் வெளிவந்தது.
பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவருமே குழுக்களாக பிரிந்து கட்சிகளைத் தொடங்கியுள்ளனர்.
தங்கள் கட்சிகளுக்கு மக்கள் குரல், உரக்கச் சொல்வோம், NNK என விதவிதமாக பெயர்களை சூட்டிய பிக்பாஸ் போட்டியாளர்கள் அவற்றுகு கொள்கைகளை வகுத்ததுடன், கொடி மற்றும் சின்னங்களையும் அறிவித்தனர்.
இதில் மக்கள் குரல் கட்சியின் மகளிரணித் தலைவர் தாமரைச் செல்வி உரக்கச் சொல் கட்சியை சேர்ந்த அபினய்யிடம் சண்டை போட்டுள்ளார்.
அதன் பின்னர், அபினய், தாமரை உள்ளிட்டோர் ஆடும்போதும் தாமரை அனைவரையும் பார்த்து இடித்துக்கொள்ளாமல் ஆடுமாறு பொதுவாக சொன்னதாக கத்தி சொல்ல, தானும் தாமரையை பார்த்து சொல்லவில்லை என்று அபினய் கத்தி வாதம் செய்தார்.
அப்போது அபினய்யை பார்த்து “ஏ.. என்னா கத்துற உன்ன குறிப்பிட்டு சொன்னேனா” என ஆவேசமானார். இதனிடையே பிரியங்கா, “முந்தைய சம்பவத்தில் இமான் உன் டிரெஸ்ஸை கிழிக்கும்போது வாய் கிழிய பேசாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் ஏன் தாமரை பேசுற என தாமரையை பார்த்து கேட்டார்.
அது மட்டும் இல்லை, பாவனியும் சேர்ந்து தாமரை நாடகமாடுவதாக கத்துகின்றனர். சண்டையின் போது பிரியங்கா நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பிரியங்கா, பாவனி உள்ளிட்ட அணியினர், “தெரியாது தெரியாதுனு சொல்றீங்க.. ஆனா நாடகம் போடுறீங்க!” என டான்ஸ் ஆடிக்கொண்டே தாமரையை விமர்சித்தனர். டாஸ்க் முடிந்த பிறகு கூட இவர்களின் சண்டை முடியாது நள்ளிரவு வரை தொடர்ந்தது.