பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தினை கொண்டுள்ள நிகழ்ச்சி தான் சர்வைவர்.
அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது உமாபதி, விஜயலட்சுமி, சரண், ஐஸ்வர்யா, இனிகோ, அம்ஜத், வனிஷா, நாராயணன் ஆகியோர் இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ளது.
வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சர்வைவர் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வாரம் என்ற பெயரில் போட்டியாளர்களுக்கு கடுமையான கொடுக்கப்பட உள்ளது.
சான்சிபார் தீவில் நடத்தப்படும் இந்த டாஸ்கில் வெற்றிபெற்று டைட்டிலை வெல்பவர் யார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது விஜயலட்சுமி தான் வெற்றியாளர் என்ற தகவல் வெளியகியுள்ளது.
இந்நிகழ்ச்சியின் நேரலை வரும் ஞாயிறன்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியினை பெற முடியாத விஜயலட்சுமி இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற கடுமையாக டாஸ்க்கினை செய்து வருகின்றார்.
விறுவிறுப்பு குறையாத இந்நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியினை காண மக்கள் பயங்கரமாக காத்துள்ளனர்.