உலகில் பல கோடி நபர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். எந்தவிதமான குறுந்தகவல்கள் பரிமாற்றத்திற்கும், போன் கால், மெசேஜ் போய் தற்போது முதலில் தகவல் பரிமாற்றித்திற்கு வாட்ஸ் அப்பை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமே 20 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஏன், எதனால் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கினார்கள் என்றால் அதற்கான 8 காரணங்களையும் இங்கே தெரிந்துகொள்வோம்.
முக்கியமாக செய்யக்கூடாதவை….
முதலில் வேறு நபரை அடையாளப்படுத்தி வாட்ஸ் அப் கணக்கை நீங்கள் பயன்படுத்தி வந்தால் முடக்கப்படுவீர்கள்.
அடுத்ததாக, உங்கள் contact list-ல் இல்லாத எண்ணிற்க்கு நீங்கள் குறுந்த தகவல்களை தொடர்ந்து அனுப்பி வந்தாலும் முடக்கப்படுவீர்கள்.
இதில் முக்கியமாக வாட்ஸ் அப்பின் உண்மையான செயலியை தவிர்த்து பிற செயலிகளான WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus ஆகிய 3-ம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வந்தாலுமே முடக்கப்படுவீர்கள்.
பல பயனாளர்கள் உங்கள் கணக்கை முடக்கி ப்ளாக் செய்தாலே உங்கள் கணக்கு முடக்கப்படும்.
பலருக்கும் தொந்தரவு அளித்து புகார் அளித்தாலும், அதற்கும் உங்கள் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்பட்டு விடும்.
தேவையற்ற மால்வேர் லிங்குகளை ஷேர் செய்தாலும், உங்கள் கணக்கை முடக்கப்படுவார்கள்.
ஆபாச வழக்கு, மிரட்டல்கள் அல்லது மானநஷ்ட குறுஞ்செய்திகள் போன்றவைகளை அனுப்பினாலும் கணக்கு முடங்கும்.
கடைசியாக, போலியான செய்திகளை பரப்புவது, வீடியோக்களை பகிர்வது, போன்றவைகளை செய்தாலும் கணக்கு முடங்குவதில் எந்தவித சந்தேகமும் இல்லை